Puducherry Info



சிறைச்சாலையான நீதிமன்றம்




காலனி ஆதிக்கத்தை விரிவு படுத்தவேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் ஆசிய நாடுகளை  ஐரோப்பியர்கள் முற்றுகையிட்டபோது ஒவ்வொரு நாடும் வெவ்வெறு பகுதிகளாவுகம்  சாம்ராஜ்யமாகவும் உடைந்த கிடந்தன. அதனால்தான், காலனி ஆதிக்கத்தை வெள்ளையர்கள் மிக எளிதாக நிலை நாட்டினர். இந்தியாவுக்குள் ஆங்கிலேயர் பிரெஞ்சியர் போர்த்துகீசியர் என ஐரோப்பியர்களின் ஆதிக்கம் நிலை பெற்றது புதுச்சேரி பிராந்தியத்தை பிரரெஞ்சியர் கைப்பற்றியதோடு தங்களுடைய காலனி ஆதிக்க நீர்வாகத்தையைம் நிறுவினார்கள்  அன்பும் அரவனைப்பும் மனிதனை மனிதாக்கம் என கூறினாலும் பரந்து விரிந்து கிடக்கம்ஒரு நாட்டில் சட்டங்களும் தண்டனைகளும் கடுமையாக இருந்தால் மட்டுமே குற்றங்கள் குறையும் என்பதே நிதர்சனமான உண்மை. அதற்காக பண்டைய தமிழகத்¬தில் நடந்த அரச சபை விசாரணை போல ஐரோப்பியர்களிடம் நீதிமன்ற விசாரணை முறை அமலில் இருந்து புதுச்சேரியிலும் அத்தகைய நடைமுறையை அவர்கள்  அமல் படுத்தினர் நீதிமன்ற விசாரணையை முதலில் அறிமுகம் செய்தவர்கள் டச்சுக்காரர்கள் புதுவையில் 1694ம் ஆண்டில் டச்சுக்காரர்களால குற்றங்களை விசாரிக்க முதல் நடுவர் மற்ம் அமைக்கப்ட்டடது-.
அந்த நடுவர் மற்றம் அமைக்கப்ட்ட இடம் இன்றைய நேரு வீதியில் உள்ள பழைய சிறைச்சாலை இருந்த பகுதி டச்சுக்காரர்கள் ஆட்சியின்போது இருந்த புதுச்சேரியின் வரைபடத்திலும் அந்த நீதிமன்றம் கட்டிக்காட்டப்பட்டுள்ளது அப்போதெல்லலாம் வீசாரணை மையங்கள் மற்றும் சிறைச்சாலைகளை சவுட்ரி என மேலை நாட்டு மொழிகளில் அழைத்தனர். 
அதுவே பின்னாளில் மருவி சாவடி ஆனது  இனறும் கூட புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளின் பெயர்கள் சாவடி என முடிவதை பார்கலாபம் அந்த பகுதிகளில் எல்லாம் விசாரணை மன்றங்கள் இருந்திரக்கலாம் என கருதப்படுகிறது.
டசசுக்காரர்களால் முதன் முதலில் உருவாக்கப்பட்ட அந்த நடுவர் நீதிமன்றம் நீண்ட நாட்களுக்க பின் 1730ம் ஆண்டு பூதப்பிக்கப்ட்டது வெவ்வேறு ஆட்சியாளர்களின் வசம் புதுச்சேரி சென்ற போதிலும் விசாரனை மன்றம் தொடர்ந்து நீடித்தது அதன் பிறகு 1780ம் ஆண்டில் முற்றிலுமாக விசாரணை மன்றம் மறு நிர்மாணம் செய்யப்ட்டது. இப்படி. நீதி பரிபாலனத்துக்காக உருவான நடுவர் மன்றமானது அங்கேலயர்களின் புதுச்சேரி படையெடுப்பின்போது நீர்மூலமானது மேலும் 1820ம் ஆண்டில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. 
பல்வேறு போர்களுக்கு பிறகு பிரெஞ்சியர் வசம் நிரந்தரமாக புதுச்சேரி வந்து சேர்ந்ததோடு பிரரெஞ்சு ஆட்சி நிலையெபறத் தொடங்கியது அதை தொடர்ந்து 1850ம் ஆண்டு வாக்கில் நீதி மன்றம் இருந்த இடத்தை சிறை வளகமாக்கினர் பின்னர் 1907ம் ஆண்டில் அந்த சிறைச்£சலை விரிவாக்கம் செய்ப்பட்டத ஒரு நூற்றாண்டுக்கு மேல் புதுச்சேரி பிரந்தியத்தின் பிரதான சிறையாக செயல்பட்டது கால ஒட்டத்தில புதுச்சேரி நகரம் விரிவடையத் தொடங்கியது. 
சிறை அமைந்த இடமானது நகரின் மையப்பகுதியனது கைதிகளை அடைப்பதற்க போதுமான இட வசதியும் இல்லாமல் போனது. இதன் நாரில் இருந்து 10 கி.மீட்டர் தொலைவில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை காலாப்பட்டு பகதிக்கு சிறை மாற்றப்பட்டுள்ளது புதுச்சேரி மாநிலத்தின் மையச் சிறையாக  உள்ள அந்த சிறைச்சாலை 2010ம் ஆண்டு முதல் காலாப்பட்டில் இயங்குகிறது அத நேரத்தில 17ம் நூற்றாண்டு மதல் புதுவையின் நீதி பரிபாலனத்தில் முக்யி பங்க வகித்த நேரு வீதி சிறைச்சாலை வளாகமானது 2012 முதல் இரு சக்கர வாகன பாதுகாப்பு கூடமாகி விட்டது.




சந்திரநாகூர் விடுதலை

independence Chandranagur




சுதந்திர இந்தியாவுக்கும் பிரஞ்சிந்தியாவுக்கும் இடையே கடுமையான நிழல்யுத்தம் நிகழந்தபோதிலும் இணைப்பு குறித்த பேச்சு வார்த்தையும் நீடித்து வந்தது- 
பிரெஞ்சு காலனியில் உள்ள புதுச்சேரி உள்ளிட்ட 5 பிராந்தியங்களிலும் மக்கள் கருத்துகளை அறிந்துஇ அதன் படி இந்தியாவுடன் இணைக்க இரு தரப்பும் ஒப்புக் கொண்டது, அந்த வரிசையில், முதல் முதலில் சந்தி நாகூர் பகுதி  மக்களே இந்தியாவுடன் இணைய அதிக ஆர்வம் கொண்டனர்.
நடுநிலையான பார்வையாளர்களை கொண்டு வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்கும் தீர்மானத்தை பிரான்ஸ் பாராளுமன்றம் 1949ம் ஆண்டு மே 26ம் தேதி நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து, ஜூன் 19ம் தேதி அன்று சந்திநாகூர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த தேதி நிர்ணயிக்கப்பட்டது, அதன்படி ரிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் தொடர்ந்து இருக்க விரும்புகிறீர்களா? என்ற கேள்வியுடன் வாக்கொடுப்பு நடந்தது இல்லை என கூறுபவர்கள் சிவப்பு நிற சீட்டையும் ஆம் என கூறுபவர்களுக்கு வெள்ளை நிற சீட்டையும் தேர்வு செய்து வாக்களிக்குமாறு கூறப்பட்டது. 
இந்த தேர்தலில் சந்திநாகூரில் அப்போதைய 12 ஆயிரம் மக்கள் வாக்களித்தனர். அதில் 750 பேர் இல்லை என கூறியாதால் இந்தியாவுடன் இணைவதற்கான பணிகள் ஆரம்பமாகின. 1950ம் ஆண்டு மே 2ம் தேதி அன்று இந்தியாவுடன் சந்திரநாகூர் இணைந்தது எனினும் அதிகார மற்ற சிக்கல்களால் 1951ம் ஆண்டு பிபரவரி 2ம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக இணைக்கப்ட்டதாக அறிவிப்பு வெளியானது. அதற்கு மறு ஆண்டில் அதிகர பரிமாற்றம் நிகழ்ந்தது
கொல்கத்தாவில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இன்றைய சந்திரநாகூர்தான் பிரெஞ்சியரிடம் இருந்து விடுதலை பெற்ற முதல் இந்திய பகுதி 1955ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி அன்று அண்டை மாநிலமான மேற்கு வங்களாத்துடன் அந்தப் பகுதி இணைக்கப்பட்டு விட்டது என்பது நினைவு கூறத்தக்கது.




Puducherry Police Head Quarters
போலீஸ் தலைமை அலுவலகம்

ஒவ்வொரு நாட்டுக்கும் பாதுகாப்பும் சட்டம் ஒழுங்கும் மிகவும் முக்கியமானது மிகச் சிறிய ஆட்சி பரப்பாக இருந்தாலும் சரி பரந்து விரிந்த பேரரசகா இருந்தாலும் சரி. இது அவசயிம். மன்னராட்சியின் அரண்மைனை சேவகர்கள், போர் வீரர்கள் தொடங்கி இன்றைய போலீசார், ராணுவத்தினர் வரை காலங்கள் மாறினாலும் இந்த நிலைமை மாறுவதில்லை. அந்த வரிசையில் புதுச்சேரியின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி வரும் காவல்துறை தலைமையகத்தின் பின்னணியை ஆய்வு செய்தால் சுமார் 300 ஆண்டு பாரம்பரியம் வெளிப்படுகிறது.
கடற்கரையோரத்தில் கம்பீரமாக இருக்கம் போலீஸ் தலைமையகமானது, துமாஸ் வீதியின் இரண்டு பக்கமும் விரிந்த நிற்கிறது அதில் குபேர் அவென்யு நோக்கி அமைத்துள்ள பகுதிற்கும் வீரம் செறிந்த நீண்ட வரலாறு உண்டு. மதன் முதலில், கடற்படை முகாம் என்ற பெயரிலேயே தனது அத்தியாத்தை அந்த இடம் துவக்யிது  கடற்ப¬யினருக்காகவே 1767ம் ஆண்டு அந்த பகுதியில் ஒரு கட்டிடத்தை பிரெஞ்சு ஆட்சியாளர்கள் கட்டினர். முதலில் கடற்படை தளமாக செயல்பட்டது பின்னர் படிப்படியாக கடல் போக்குவரத்துக்கான பகுதியாக மாறியது 1785 ஆண்டில் இதன் பெயர் ஆர்சனல் தெ லா மரைன் 17  மற்றும் 18ம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயரிடமும் பிரெஞ்சியரிடமும் நாடு நாடு பிடிக்கும் வேட்கை தீவிரமாக இருந்தது எனவே பிரெஞ்சு படை வீரர்கள் குவிக்கப்ட்டனர் அதனால் 1820ம் ஆண்டில் படை வீரர்கள் முகாமாக அந்த கட்டிடம் தோற்றம் பெற்றது நீண்டகாலமாக ராணுவ தளமாகவே அந்த இடம் இருந்தது. 
இதேபோல துமாஸ் வீதியின் மேற்கு பகுதியில் உள்ள  கட்டிடத்துக்கும் தனி வரலாறு உண்டு தனியார் ஒருவரிடம் அந்த இடம் இருந்தது இளம் கடற்படை வீரர்களுக்க பயிற்சி அளிக்க கூடுதல் இடம் தேவைப்பட்டதால் அந்த இடத்தை 1853ம் ஆண்டில் பிரெஞ்சு அரசு வாங்கியது. அருகில் இருந்த  ராணுவ தளத்துடன் இந்த பகுதியும் சேர்ந்து சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக பிரெஞ்சியரின் போர்ப்படை தளமாகவே விளங்கியது-.
1954ம் ஆண்டு இந்தியாவுடன் புதுச்சேரி இணையும் வரை நீடித்த இந்த நிலைமை அதன் பிறகு மாறியது, தற்போது இந்த இரண்டு கட்டிடங்களும் புதுவை மாநிலத்தின் போலீஸ் தலைமையகமாக (ஐ ஜி அலுவலகமாக) செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.


Search Results

Web results



Chinna Manikoondu Petite Tower Clock
 சின்ன மணிக்கூண்டு 


பெரிய மார்க்ªட் போலவே புஸ்சி வீதி முனையில் அமைந்துள்ள மார்க்கெட்டும் முக்கியமானதே இது 1886ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மார்க்கேட் பகுதியிலும் ஒரு மணிக்கூண்டு உள்ளது. சின்ன மணிக்கூண்டு என அழைக்கப்படும் அது அன்றைய மைசூர் மகாராஜாவால்  அடிக்கல் நாட்டப்பட்டு 1892ம் ஆண்டு கட்டப்பட்டது. சின்ன மணிக்கூண்டை கட்டியவர் லட்சுமணசாமி செட்டியார் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த மைசூர் மகாராஜாவுக்க தங்கத்தால் நினைவு பரிசு வழங்கினார்.




The beauty of the city Puducherry
புதுவைநகரின் அழகு



புதுவையின் நகரின் அழகு திருவாரூர் தேர் அழகு கூடல் மாநகரான மதுரையின் நான்மாட வீதிகளின் நேர்த்தி அழகு அந்த அழுகு பானியில் புதுவை நகரின் நேர் விதீகளுக்கும் இடம் உண்டு வெளிமாநில மக்கள் மதியில் புதுச்சேரியின் பெயரை கூறியதும் அவர்களுடைய நினைவில் கடல் நோக்கி செல்லும் நேர் வீதிகள் நிழலாடுவதை தவிர்க்க முடியாது. ஆம் புதுவைக்கு புல்வார் அழகு. பிரெஞ்சியர்களின் முழுமையான குடியிருப்பு பகுதியாக இருந்த புல்வாரில் இருக்கும் ஒவ்வொரு கட்டிடமும் பிரான்ஸ் நாரீகத்தையும் பிரெஞ்ச வாசத்தையும் இன்றம் காற்றில் பரப்பி வரகின்றன புதுவையின் பிரெஞ்சு அழகியலுக்கு நிகழ்கால உதாரணமாக இருக்கும் புர்வாரின் வீதிகள் ஒவ்வொன்றும் பிரெஞ்சு அட்சியாளர்களின் பெயர்களுடன் அவர்களை நினைவூட்டிக் கொண்டிருக்கிறது



Kapps Temple Puducherry
கப்ஸ் கோவில் புதுச்சேரி

கப்ஸ் கோவில் புதுச்சேரி 1851ம் ஆண்டு கட்டப்பட்டபோது கோவிலை காலம் கடந்து நிற்கச் செய்ய வேண்டும் என முடிவானது, கடலோரத்தில் இருப்பதால் உப்புக் காற்றால் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக முட்டையின் வெள்ளைக் கரு சுண்ணாம்புக் கல் போன்றவற்றை காண்டு தேவாலயம் கட்டப்பட்டது, இதற்காக ஒரு லட்சம் முட்டைகள் பயன் படுத்தப்பட்டன, வெள்ளை நிற மார்பிள் எட்டு தூண்களுடன் வளைந்த தோற்றம் காண்ட மிக உயர்ந்த உச்சி மாடம் பிரமாண்டமான ஸ்தூபி என கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த  தேவலாம் கிரேக்க ரோமன் கட்டிக் கலையை இன்றளவும் எடுத்துக் கூறி கொண்டு இருக்கிறது.
தேவாலயம் கட்டப்பட்டதும் அரியவகை அயில் பெயிண்டிங்கால் வரையப்ட்ட மேரிமாதா சித்திரத்தை 1863ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பிரான்ஸ் மன்னர் மூன்றாம் நெப்போலியன் பரிசாக வழங்கினார் தற்போது அந்த சித்திரம் காணவில்லை, ஆனால் அந்த சித்திரத்தை தாங்கிய மரச்சட்ம் மட்டும் சித்திரத்தின் பிரமாண்டத்தை கூறியபடி கோவிலுளுள் பாழடைந்து இருக்கிறது.



Puducherry Chief Secretariat புதுச்சேரி தலைமைச் செயலகம்




புதுச்சேரி கடற்கரையோரம் பல மாடி கட்டிடம்மா உயர்ந்து நிற்கும் தலைமைச் செயலகத்துக்க 4 நூற்றாண்டு பின்னணி உண்டு 1770ம் ஆண்டில் விடுதி கட்டிமாகவே தனது அத்தியத்தை தலைமை செயலகம் துவங்கியது இன்றைய தலைமை செயலகத்தின் மேற்கு பகுதியில் அந்த விடுதி கட்டிடம் இருந்தது 1778ம் ஆண்டு வாக்கில் அது அரசுடைமை ஆனது தோடத்த்துடன் கட்டிடம் விரிவு படுத்தப்பட்டது. அங்கேயே நிர்வாக அலுவலகம் செயல்பட துவங்கியது 1788ம் ஆண்டில் நீதி மற்றும் நிர்வாக தலைமை அலுவலகமாக மாறியது அதன்பிறகு 1816ம் ஆண்டில் பிரெங்சிந்திய போலஸ் தலைமை அலுவலகமானது அரை நூற்றாண்டுக்கு பின் 1884ம் ஆண்டு வாக்கில் உள்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாக அலுவலகமாக மாற்றப்பட்டது சுமார் 200 ஆண்டுகளாக பிரரெஞ்சிந்திய ஆட்சி பீடத்தின் முக்கிய தூணாக இருந்தது இந்த பகுதியானது இப்போது ஆட்சி மையமாகவே நீடிப்பது வியத்தகு உண்மை.





Puducherry Railway Station
புதுச்சேரி ரயில் நிலையம்




இந்தியாவில் பிரெஞ்சியர் ஆளுகையில் இருந்த பகுதிகளை அங்கிலேயர் கைப்பற்ற்¤ஆட்சியை விட்டு பிரெஞ்சியரிடம் மீண்டும் ஒப்படைத்த போது துண்டு துண்டாகவே அளித்தனர். பிரெஞ்சு ஆதிக்கம் மேலோங்கி விடக்கூடாது என்பதே அதன் உள்ளோக்கம் அவ்வாறு துண்டு துண்டாக இருந்த பகுதிகளை சுற்றிலும் அங்கிலேயர் வலுவாக இருந்தனர் புதுச்சேரியை சுற்றி கடலூர் செல்லும் பகுதி கிழக்கு கடற்கரை சாலைவாயிலாக சென்னை செல்லும் பகுதி போன்றவற்றை அப்படி துண்டாக்கப்பட்டவையே.
அப்படி துண்டு  துண்டாக இருந்த பகுதிகளிலும் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதில் பிரெஞ்சியர் உறுதியாக இருந்தனர். அதற்காக ஆங்கிலேயருடன் இணைந்து பிரெஞ்ச ஆங்கில காலனி பகுதிகளுக்கு டையே சாலைகள் அமைக்கப்பட்டன புதுவையில் இருந்து கடலூர் செல்லும் பாதையும் அவ்வாறு உருவானதே ஆனால் வழியில் அறுகள் குறுக்கிட்டாதல் பாலங்கள் எழுப்ப முடிவு செய்யப்பட்டது

புதுவைக்கு அருகே ஒடும் சங்கராபரனி ஆற்றின் மீது இரண்டு பெயரிய பாலங்கள் கட்டப்பட்டன அரியாங்குப்பம் சுண்ணாம்பாறு பாலங்கள் அப்படி எழுந்தவையே இன்று கடலூக்கு செல்வாகனம் அனைத்தும் பயணிக்கும் சுண்ணாம்பாறு பாலத்தை யொட்டி பிரெஞ்சியர் நாட்களை நினைவில் தேக்கியபடி நீண்டு கிடக்கும் பழைய பாலம் 1880ம் ஆண்டு கட்டப்பட்டது பிரெங்சு கவர்னர் லியோன்ஸ் உத்தரவின்பேரின் அங்கியேலர் உதவியோடு அந்த பாலத்தை கட்டினர்

இதுபோல ரயில்போக்குவரத்து வசதியை கொண்டு வருவதிலும் அதிக ஆர்வம் காட்டினார்கள் இன்றைய காந்தி சிலை பகுதியே பிரெஞ்சியர் ஆட்சி காலத்தில் துறைமுகமாக இருந்தது அந்த துறைமுகம் வரைலும் 1886ம் ஆண்டில் கடலுக்குள் இரும்புப்பாதை அமைக்கப்பட்டிருந்தது அந்த பதை சரக்குகளை இறக்கும் டிராலிகளை கொண்டு செல்லவே முதலில் பயன்பட்டது அதன் தொடர்ச்சியாக ரயில் பாதை கனவு விரிவானது.
 அதன் விளைவாக உருவானது. பாண்டிச்சேரி ரயில்வே கம்பெனி பிரªஞ்சு காலனி அட்சியாளர்களின் அறிவுரைப்படி 1878ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி அன்று அந்த கம்பெனி தொடங்கப்பட்டது அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி ரயில் நிலையமும் உருவாகத் தொடங்கியது ரயில் நிலையம் அமைத்தால் போதுமா ரயில் வர வேண்டாமா-? அதற்காக ஆங்கியேலருடன் பேச்சு வார்த்தை தொடங்கியது. சட்ட ரீதியாக சில சலுகைகள் வழங்கப்பட்டன. அதன் பிறகு தமிழகப் பகுதியாக விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக் ரயில் இயக்கப்பட்டது வில்லியனூர் வழியாக அமைக்கப்பட்ட ரயில் பாதையில் 1879ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதிஅன்று முதல் ரயில்  புதுச்சேரி வந்தது சேர்ந்து. முதல் ரயில் வந்த பிறகே அதிகாபூர்வமாக டிசம்பர் 15 அம் தேதி அன்று புதுச்சேரி ரயில் நிலையம் திறந்து வைக்கப்பட்டது. சென்னை டெல்லி என பல்வெறு நகரங்க¬யும் விழுப்புரம் வழியாக புதுச்சேரியுடன் இணைக்க பிரெஞ்சியரின் இந்த செயல்களே அடித்தளமாக அமைந்தது.






Assembly Building Puducherry
சட்டசபை கட்டிடம்







பிரெஞ்சியரால் மருத்துவ  கல்லூரியாக துவங்கப்பட்ட கட்டிடம்தான் இன்றைய புதுச்சேரி சட்டசபை கட்டிடம் 1962ம் ஆண்டு வரை மருத்துவக் கல்லூரியாக, இங்குதான் செயல்பட்டது இந்தியாவுடன் புதுச்சேரி இணைவதாக ஒப்பந்தம் போடப்பட்ட 1954ம் ஆண்டுக்கு பிறகும் கூட கல்லூரியாகவே செயல்பட்டது. பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து முழுவதுமாக விடுபட்டு இந்தியாவுடன் புதுச்சேரி இணைந்த பிறகே கல்லூரி இடம் பெயர்ந்தது முதல் சட்டசபை தேர்தலுக்கு பிறகு சட்டசபை கட்டிடமானது 1963 முதல் புதுச்சேரி சட்டசபை இங்கு செயல்பட்டு வருகிறது. 



Romain Rolland Library (Pondicherry) 
ரோமன் ரோலண்ட் நூலகம் புதுச்சேரி




பிரெஞ்சு இந்திய புதுச்சேரியின் கவர்னராக இருந்த எங்கனே டெச்பைச்ச்ய்ன்ச் தே ரிச்மொன்டால்  புதுச்சேரியில் 1827ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இங்குள்ள புத்தகங்களின் எண்ணிக்கை 1839 ஆம் அண்டு 5,013 ஆக இருந்தது. 1850ஆம் அண்டு இந்த எண்ணிக்கை 6,500 ஆக உயர்ந்தது. கணினி புத்தகங்களுக்காக ஒரு தனி பிரிவு இயங்குகின்றது.
இந்த நூலகம் துவங்கப்பட்டபோது போது பொது நூலகம் என்று கூறபட்டாலும் அதில் ஐரோப்பியர்கள் மட்டுமே அனுமதிக்கபட்டனர். மற்றவர்கள் சிறப்பு அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே அனுமதிக்க பட்டனர். பிரெஞ்சு மொழி கற்கவும் அதைக் கற்ற பூர்விக குடிமக்கள்வும் தங்கள் பிரெஞ்சு மொழி ஆற்றலை மேம்படுத்த 1837 ஆம் ஆண்டு இந்தத் தடை நீக்கபட்டது.

  • காலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணிவரை .
  • செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக் கிழமை வரை எந்தவித இடர்பாடும் இன்றி இயங்குகிறது.
  • திங்கள் கிழமை அன்று மட்டும் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாரஇதழ்கள் வாசிப்புக்கு மட்டும் இயங்கும்.


Pondicherry calve college
கல்விப் பாதை திறந்து வைத்தத கல்வே






இந்தியாவுக்கள் நுழைந்து காலனி ஆதிக்கம் செலுத்திய வெளிநாட்டினர் அனைவருமே ஒரு விதமான மனப்பான்மையில் தான் இருந்தனர். ஆங்கிலேயரிடம் அடிமையாக இருந்த இந்தியாவில் என்ன நிலை நீடித்ததோ அதற்க இணையான நிலையே பிரெஞ்சியர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த இந்திய பகுதியான புதுச்சேரியிலும் இருந்தது சாதி மதரீதியான எற்றத் தாழ்வுகள் தீண்டாமை போன்றவை சாதாரணமாக அரங்கேறின. புதுச்சேரி காலக் கண்ணாடியாக திகழும் அனந்தரங்கர் நாட்குறப்பிலும் இது பிரதிபலிக்றிது பிரெஞ்சியர் தாழ்த்தப்பட்டோர் கிறிஸ்த்தவர் மதத்தை தழுவிய தமிழ் நாட்குறிப்பு உச்சரிக்கிறது மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான கல்வி நீரோட்டத்திலும் இந்த ஏற்றத்தாழ்வு நிலை இரண்டறக் கலந்து ஒடியது. புதுச்சேரி பிரெஞ்ச ஆதிக்கத்தில் இருந்தால் பிரெஞ்சு ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றால் மட்டுமே உயர்கல்வி படிக்க பிரான்ஸ் செல்ல முடியும் ஆனால் தமிழ்க் கல்வி மட்டுமே இலவசமாக கற்றுத் தரப்பட்டது. பிரெஞ்சு ஆங்கிலம் போன்ற மொழிகளை படிப்பதற்கு கல்வி கட்டணம் செலுத்த வேண்டும். அதே வேளையில் பிரெஞ்சியருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மட்டுமே பள்ளிகளில் இடம் உண்டு இந்து தமிழ் மாணவர்களுக்கு பள்ளிகளே கிடையாது. இப்படி கல்விக்கான வாய்ப்புகள் அனைத்தும் அடைக்கப்ட்டிருந்த நிலையில் இருந்த தமிழ் பேசும் மாணவர்களுக்கு விடிவெளியாக வந்து சேர்ந்தார் கலவை சுப்பாரய செட்டியார் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கலவை என்ற ஊரில் இருந்து 1840ம் ஆண்டு புதுச்சேரியில் வியாபாரத்தை விரிவு படுத்த அவரது முன்னோர் குடிபெயர்ந்து வந்தபோது கலவையும் குடும்பப் பெயராக ஒட்டிக் கொண்டது பிரெஞ்சியர் ஆதிக்கத்தின் போது புதுச்சேரியில் துணி மற்றும் துணிகளுக்கான சாய வர்த்தகம் கொடிகட்டி பறந்தது சுப்பராய செட்டியாரும் சாய உற்பத்தி செய்து பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார். தமிழ் மாணவர் நிலைமையை கவனித்த அவருடைய மனதில் இரக்கம் ஊற்றெடுத்து தமிழ் மாணவர்களுக்காவே தனியார் ஒரு பள்ளிக்கூடம் கட்ட தீர்மானித்தார் இடத்துக்க என் செய்வது என அவர் சிந்தித்தபோது பிரரெஞ்சியரால் கறுப்பர் நகரம் என பிரித்து அழைக்கப்பட்ட தமிழ் மக்கள் வாழும் பகுதிக்குள் இருந்த ஒரு கல்லறை தோட்டம் அவரது கண்ணில் பட்டது குடியிருப்புகளுக்குல் இருந்த அந்த பகதியை தனது வியாபர செல்வாக்கினால் பிரெஞ்ச அதிகாரிகளிடம் இருந்து வாங்கினார் அதிலேயே மிகப்பெரிய பள்ளி ஒன்றை காட்டினால் 1877ம் ஆண்டு மே 2ம் தேதி செயல்படத் தொடங்கியது. அதுதான் நூற்றாண்டை கடந்த தற்போதும் புதுச்சேரியில் கல்வி போதித்து வரும் கல்வே கல்லூரி அரம்பத்தில் தமிழ் இந்து மாணவர்கள் மட்டுமே இங்கு சேர்க்கப்ட்டனர் ஒதுக்கப்பட்ட தமிழ் மாணவர்களுக்காவே இந்த பள்ளி செயல்பட்டது, முதலில் பிரெஞ்சு, தமிழ், தெலுங்கு மொழி வழிக் கல்வி இங்கு போதிக்கப்பட்டது பின்னாளில் அங்கிலத்திலும் சேர்ந்தது கொண்டது, எனினும் தெலுங்கு மொழிக்கு அதிக மாணவர்கள் சேராததால் அது கைவிடப்பட்டது. தொழில்நுட்ப கல்வியும் இந்த கல்லூரியில் நடத்தப்பட்டது உண்டு பிரெஞ்சியரால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்காவே உருவான கல்வே கல்லூரி பின்னாளில் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு அனைத்து வகுப்பு மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.



New port of Puducherry
புதுச்சேரியின் புதிய துறைமுகம்

புதுச்சேரி விடுதலைக்கு பின் கடற்கரையிலேயே மீண்டும் ஒரு துறைமுகம் கட்டும் பணி 1958ம் ஆண்டு தொடங்கி 1962ம் ஆண்டு நிறைவடைந்தது. அந்த ஆண்டிலேயே புதிய துறைமுகம் செயல்படத் தொடங்கியது.  துறைமுகத்தில் இருந்து கடல் நோக்கி பாலம் ஒன்றும் கட்டப்பட்டது புதுவையில் இருந்தபடி தென்னகத்தையே அரசாட்சி செய்து விட்டு கடற்கரையின் ஒரத்தில் காட்சிப் பொருளாக நிற்கும் டூப்பளக்ஸ் சிலை அருகிலேயே அமைதியா இருக்கும் பழைய துறைமுகம் தான் அந்த துறைமுகம் பழை துறைமுகத்தில இரு கடலுக்குள் கட்டப்பட்ட பாலமும் சிதிலமடைந்த நிலையில் தற்போது காட்சி அளித்துக் கொண்ருக்கிறது.
துறைமுகம் கட்டப்பட்டதும் காந்தி சிலை வரை நீண்டு கிடந்த இருபுரப் பாதை வழியிலேயே குறுகி இந்த துறைமுகத்துடன் நின்றது சரக்குப் போக்குவரத்து சுறுசுறுப்பான பாமாயில் சரக்கரைப் பாகு போன்ற பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி என 2000 ம் ஆண்டு வரை முழு வீச்சில் செயல்பட்டது அந்த துறைமுகத்திடம் தனியார் மயமாதல் வடிவத்தில் விளையாடி விட்டது தனியார் மயமாக்கல் கொள்கையில் விளைவாக செயல்பாடு எதுவும் இன்றி பழைய துறைமும் என்ற அடையாளத்துடன் காட்சிப் பொருளாக மட்மே இருக்கிறது துறைமுகம் மட்டுமல் அதிலிருந்து கடல்நோக்கி நீண்டு கிடக்கும் கான்கீரிட் பாலமும் புதுப்பிக்க ஆளின்றி பரிதாப நிலையில் நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறது.




Train to sea
கடலுக்கு வந்த ரயில் 



தோகை விரித்தாடும் மயில் வளைந்து நெளித்து செல்லும் ரயில், ஆரவாரமும் அமைதியும் ஒருங்கே அமைந்த கடல் என மனித மனதுக்கு சலிப்பே எறுபடுத்தாக சிலவற்றை வரிசையாக பட்டியலிடலாம் அதில் அறிவியல் அதிசயமாக விளங்குவது ரயில் முதன் முதலில் இந்தியாவுக்குள் கலடி வைத்த ஆண்டு 1853 துறைமுக நகரான மும்பையில் முதல் ரயில் ஒடியதை அதைத் தொடர்ந்து. சென்னையில் 1856ம் ஆண்டு ரயில் ஒடத் தொடங்கியது. ஆடத்த பத்து ஆண்டுகளுக்குள் புதுச்சேரியிலும் ரயில் போக்குவருத்து தொடங்கியது-. 

அந்த அளவுக்கு புதுவை துறைமுகம் பிரபலாமாக இருந்தது தற்போது உப்பளம வரை இருக்கும் இருப்புபாதை அப்போது   கடற்கரை காந்தி சிலை வரை நீண்டு கிடந்தது. ரயில் நிலையம் உப்பளம் பழைய துறைமுகம் வழியாக கடற்கரைச் சாலை காந்தி சிலை உள்ள பகுதி வரையிலும் ரயில் வந்து சென்றது வங்கக் கடல் வழியாக புதுச்சேரி நகரை உலகின் பிற நாடுகளுக்க அறிமுகம் செய்து வைத்த துறைமுகம் வழியி£க கடற்கரைச் சாலை காந்தி சிலை உள்ள பதி வரையிலும் ரயில் வந்து சன்றது. வங்கக் கடல் வழியாக புதுச்சேரி நகரை உலகின் பிற நாடுகளுக்க அறிமும் செய்து வைத்த துறைமுகம் மற்றும் கடல் பாலத்துடன் தன்னையும் இணைத்துக் கொண்டது இந்த சரக்கு ரயில்  அதற்காக கடற்கரை சாலையில் இருப்புப்£தை அமைக்கப்பட்டு இருந்தது கப்பல்களில்¢வந்து இறங்கும் சரக்குகளை டிராலியில்  ஏற்றி தள்ளிவந்து சரக்கு ரயிலின் பெண்டிகளில் தொழிலாளர்கள் நிரப்பினர்.
தோணி வழியாக சரக்குகளை இறக்கி வாகனங்கள் மூலம் சரக்குகள் கொண் செல்லப்பட்ட நிலைமை மாறியது ஒரு புறம் கப்பல் போக்குவரத்து. மறுபுறம் ரயில் போக்குவரத்து இதற்கிடையே வண்டிகள் மூலமாக நகருக்குள் சரக்கு போக்குவரத்து இதற்கிடையே வண்டிகள் லாமாக நகரக்குள் சரக்கு போக்குவரத்து என கடற்கரை சாலையும் துறைமுகமும் ஜெகஜோதியாக இருந்தது. சாதாரண மீனவ கிராமாம் இருந்தது கால சக்கரத்தின் சுழற்சியிலும் பிரான்சுவா மார்த்தேன், டூப்ளக்ஸ் போன்ற பிரெஞ்சு கவர்னர்களின் பெருமுயற்சியிலும் பிரபலமான துறைமுக நகரமாக புதுச்சேரி மிளர்ந்தது.
பிரெஞ்சு காலனி ஆட்சியின் இறுதி வரை புதுவையோடு கடற்பாலமும் ரயிலும் பின்னிப் பிணைந்து கொண்டு இருந்தன இதை சின்னாபின்னமாக்க பிரரெஞ்ச ஆட்சிய்ன இறுதியில் பேர்அதிர்ச்சி காத்திருந்தது அமைதியாக இருக்கும் சாது மிரளுவது போல சாந்த சொரூபியாக காட்சியளிக்கும் கடல் அன்னையும் அவ்வப்போது கோபத்துடன் பொங்கி எழுவதைத் தானே இயற்கை என்கிறோம். அந்த இயற்கையின் விபரீத விளையாட்ட 1952 ஆண்டு அரங்கேறியது
அப்போது வீசிய மிகப்பெரிய கடல் சூறாவளி காற்று புதுவையை பதம் பார்த்தது நகரையே வாட்டி வதைத்த சூறாவளிக்கு கடலில் இருந்த பாலம் எம்பாத்த்திரம்? கல் பாலம் கந்தல் கந்தலாகிப் போனது 150 ஆண்டுகளாக புதுச்சேரிய் அடையாளமாக இருந்த பாலமும் கடற்கரை துறைமுகமும் துடைத்தெறியப்பட்டன.






Le cafe hotel Pondicherry
ஒட்டலாக மாறிய துறைமுகம்







பிரெஞ்ச ஆட்சிக் காலத்தில் பாண்டிச்சேரி துறைமுகம் இருந்த கடல்வழி நுழைவு வாயிலாக போதிலும், பின்னாளில் வங்கச் கடலின் துறைமுக நகர்களில் ஒன்றாக கோலோச்சும் வாய்ப்பு புதுச்சேரிக்கு கிடைக்கவில்லை. எனினும் கடல்பாலம் முழுவீச்சில் செயல்பட்டபோது இருந்த புதுச்சேரி துறைமுகம் இபோதும் வேறு வழியில் புதுவையின் சுற்றுலாப் பயணிகளை வசீகரித்துக் கொண்டிருக்கிறது. அது தற்போதைய புதுவை கடற்கரை சாலையில் அமைந்துள்ள லே கபே.
மாலை நேரத்து ரம்மியமான சூழலில் கடல் காற்றுடன் கைகோர்த்தபடி உணவு வகைகளை ருசிக்க எற்ற இடமாக கடற்கரையிலே அமைந்திருக்கும் இன்றைய லே கபே ஒட்டல்தான், அந்த நாளின் பாண்டிச்சேரி துறைமுகம், கடல் நோக்கி இருக்கும் பகுதியின் மீது பாண்டிச்சேரி என்றும் கடற்கரை சாலை நோக்கியுள்ள பகுதி மீது துறைமுகம் என்றும் ஆங்கிலத்தில் கொட்டை எழுத்துகளில் அப்போது எழுதப்பட்டிருந்து

பல்வேறு வெளிநாட்டினரும் வந்து செல்லு இடமாக விளங்கிய பாண்டிச்சேரி துறைமுகம் இன்றும் கூட வெளிநாட்டு பயணிகள் வந்து செல்லும் இடமாக லே கபே என்ற பெயரில் நிலைத்து நிற்கிறது என்பது ஆச்சரியமூட்டும் செய்தி காலம் கடந்து நீடித்து வரும் இந்த தொடர்பானது வியப்பூட்டும் ஒற்றுமை.





Pondicherry Old Sea Bridge
பெருமை சேர்த்த கடல்பாலம் 




புதுச்சேரி மக்களின் பொழுதுபோக்குத் தலமாகவும் அதிகாலை வேளையில் நடைபயிற்சிக்கு உகந்த களமாகவும் 2 கீலோ மீட்டர் தொலைவுக்க நீண்டு கிடக்கும் புதுமை கடற்கரை காவியமாக இருக்கின்றன துறைமுகம், கடல் பாலம், லே கபே  சுங்கச் சாவடி கலங்கரை விளக்கம் டூப்ளெக்ஸ் சிலை என் பல்வேற கதை களங்கள் டற்கரையில் கட்டியம் கூறியபடி இவற்றுள் கடல் பாலத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு தற்போது காந்தி சிலை வீற்றிருக்கும் இடத்தில இருந்து கடல் நோக்கி அந்த பாலம் சென்றது. கடல் அலைகளில் சிக்கி உயிருக்கு போராடும் ஜீவனைப் போல ஒரு சில கம்பிகள் மட்டுமே.  பாலம் இருந்ததது என்பதை உணத்த்தும் விதமாக அவ்வப்போது அலைகளுக்கு நடுவே எட்டிப் பார்த்துக் கொண்டிருகின்றன. அந்த கம்பிகள் எல்லாம் ஒரு காலத்தில மிகப்பெரிய பாலத்தை தாங்கிக் கொண்டிருந்தவை என்றால் பலருக்கும் அந்த தகவல் மிகுந்த ஆச்சரியமூட்டலாம்.
புதுச்சேரியில் வேர் பிடித்து இந்திய பகுதிக்குள் பிரெஞ்சியர் கிளை பரப்பத் தொடங்கியதும் ஆடை ஏற்றுமதி சூடுபிடித்தது வால் மிளகு, சுக்கு, ஏலம் போன்ற வாசனைப் பொருட்கள் இறக்குமதி யாகின. கறுப்பு இன மக்களை வெறுப்புடன் பார்த்தபடி புதுவை நகர வீதிகளில் இறுமாப்புடன் உலா வந்த பிரெஞ்சு மக்கள் மக்களின் சொகுசு கார்களும் கடல் வழியாக வந்து இறங்கின. இதனால் புதுவை கடற்கரை மிகுந்த சுறுசுறுப்புடன் இருந்தது ஏனெனில் தற்போதைய கடற்கரை பகுதிதான அன்றைய துறைமுகம்.
பொருட்களை ஏற்றி வரும் கப்பல்கள் அனைத்தும் கரையின் விளிம்பு வரை வந்து சேர முடியாது. சிறுது தொலைவிலேயே நங்கூரம் பாய்ச்ச நேரிடும் அதனால் சரக்குகளை கரைக்கு கொண்டு வர தோணி, நாட்டுப் படகுகள் போன்றவற்றையே பெரிதும் நம்பி இருந்தனர் இது மிகவும் கடினமான பணி பல்வெறு சிக்கல்களையும் உருவாக்கியது அப்போது மாற்று வழி கண்டுறிந்த சிந்தனை மேலோங்கியதன் விளைவாக உதித்ததே கடல் பாலம் கடலுக்குள் கப்பல் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்படும் இடம் வரை கரையில் இருந்து நீளமாக இரும்பு பாலரம் அமைப்பதே அந்த திட்டம்.
அதன் படி 1861ம் ஆண்டு கடலுக்குள் பாலம் அமைக்கும் பணி தொடங்கியது கடற்கரையில் இருந்து கடல் நோக்கி 192 மீட்டர் நீளத்துக்கு அந்த பாலம் நீண்டு வளர்ந்தது. ஆறு ஆண்டு கால இடைவிடாத பணிகளுக்கு பின் 1866ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி கடல் பாலம் திறந்து வைக்கப்ட்டது. பிரான்ஸ் கடற்படை அனுமதியோடு உருவான அந்த பாலத்தை வடிவமைத்து கட்டிக் கொடுத்தவர் லலேமரேஸ் என்ற பிரெஞ்சு என்ஜினீயர்.
கப்பலில் சரக்குகளை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் மட்டும் அந்த பாலம் பயன்படவில்லை, அந்த காலத்தில் மாலை நேர பொழுதுபோக்கு தலமாகவும் இந்த கடற்பாலம் விளங்கியது இந்தியாவில் இது போன்ற கடற்பாலம் அப்போது எங்குமே இல்லை என்பதும் அதன் சிறப்பு அம்சங்களில் சிகரமாக அமைந்தது. 
பின்னாளில் பெரிய கப்பல்களும் புதுவையை எட்டிப்பார்பத்துச் செல்லத் தொடங்கியதால் 15 ஆண்டுகள் கழிந்து மேலும் 65 மீட்டருக்கு நீட்டிக்கப்பட்டது பின்னர் 30 ஆண்டு கழித்து வடுதலாக 80 மீட்டர் நீட்டிக்கப்பட்டடு மொத்தம 336 மீட்டர் நீளத்தில் புதுவை கடற்கரை துறைமுகத்தில் கடற்பாலம் மிரட்டிக் கொண்டு இருந்தது அது மட்டுமல்ல பாலத்தின் இரு மருங்கிலும் தடுப்புச் சுவர்களும் எழுப்பப்பட்டன.

வங்கக் கடலில் உலாவிய கப்பல்களையும் புதுவை கடற்கரையையும் கை கோர்த்து இணைத்து வைத்த இந்த பிரமாண்டமான கடற்பாலத்துக்கு நேடிய விருந்தாளி ஒருவரும் வந்து சேர்ந்தார் 




Bharathidasan Museum, Puducherry 

பாரதிதாசன் அருங்காட்சியகம்





பாரதிதாசன் அருங்காட்சியகம்  புதுவையில் தோன்றிய புரட்சிக் கவிஞயர் பாரதிதாசன் வாழ்ந்த 95 பெருமாள் கோயில் தெருவில் உள்ள இல்லம் பாரதிதாசன் அருக்காட்சியகம் இவர்  பாரதியின் மாணவர் அவர் இலக்கியப் படைப்புகள் எண்ணற்றவை பாண்டியன் பரிசு குடும்பவிளக்கு ஆகிய காப்பியங்கள் குறிப்பிடத் தக்கவை திராவிடக் கலாச்சாரம் பெண்ணுரிமை ஆகியவற்றை முன்வைத்துத் திரைப்படங்களுக் வசனம் எழுதினார்






Bharathi Park, Pondicherry|

பாரதி பூங்கா



     பாரதி பூங்கா இது புதுச்சேரி நகரின் மத்தியப்பகுதியில் உள்ளது அங்குள்ள அழுகு மிக்க இட்ங்களில் இதுவும் ஒன்று  பசுமையான சூழலும்  நிழல் தரும் நெடிதோங்கிய மரங்களும் புதுவையின் வெப்பத்தைத் தணித்து இதமளிக்கின்றன பூங்காவின் மையப்பகுதியில் உள்ள அழகான ஆயி மண்டபத்துடன் வியப்பூட்டக் கூடிய சிறு சிறு விஷயங்களும் பல உள்ளன கிரானைட் கற்களில் செதுக்கப்ட்டள் அழகான துண்களையும் தெய்வங்கள் யாழிகள் ஆகியவற்றின் சிலைகளையும் கண்டு மகிழலாம் பூங்காவைச் சுற்றிலும் பார்த்து மகிழத்தக்க பல பாரம்பரியக் கட்டங்களும் உள்ளன



Mahakavi Bharathiyar Memorial Centre

பாரதியார்  அருங்காட்சியகம்




பாரதியார் நினைவு அருஙகாட்சியகம்    பாரதியார் என்ற அனைவராலும் அறியப்பட்ட பாட்டுக்கொரு புலவரான பாரதி 1908 இல் பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து இங்க அடைக்கலம் புகுந்தார் பிரெஞ்ச தேசத்து சுதந்திரக் காற்றினை சுவாசித்தால் அவரது ஆற்றல் அங்கு முழுமையாக வெளிப்பட்டது வீரம் மிக்க தேசியப் பாடல்களும் காதலின் பெருமையை வெளிப்படுத்தும் காப்பியங்களும் இங்குதான் அவரால் எழுதப்பட்டன பாரதி வாழ்ந்த இல்லம் பாரதி பூங்கா அருகில் காட்சியகமாக எண் 20 ஈஸ்வரம் தர்மராசா கோயில் ªருவில் உள்ளது தமிழ் மக்களின் புண்யத் தலமாகவும் விளங்குகிறது.


Aayi Mandapam

ஆயிமண்டபம் 


இது பிரெஞ்சுப் பேர்ரசர் மூன்றாம் நெப்போலியன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட வெள்ளைநிற நினைவுச் சின்னம் ஆகும். அவர் காலத்தில் புதுச்சேரிக்குக் குடிதண்ணீர் வசதி செய்து கொடுத்ததையும் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்மணி செய்ததொரு நல்ல செயலையும் நினைவூட்டும் வகையில் எழுப்பட்டுள்ளது இந்த நினைவுச் சின்னம்.



Auroville


ஆரோவில் 




அரோவில் அல்லது  விடியல் நகரம் என்பது அரவிந்தரின் ஆன்மீகச்  சீடாரால் ஊருவாக்கப்ட்டது மனித இன ஒருமைப்பாட்டின் ஒற்றுமையின் ஆய்விடமாகக் கருதப்படுகிறது இது சாதி சமய அரசியல் தேச எல்லைகளுக்கு அப்பாற்பட்ட நல்ல உள்ளங்கோண்டவர்கள் அமைதியுடனும் ஆனந்தத்துடனும் இணைந்து வாழும்மையான கலைநகரம் ஆகும் இது 1968 இல் உருவானது ஆரேவில்லில் வாழ்கிறவர் தெய்வவீக உணர்வோடு தொண்டு  செய்பவராக இருக்க வேண்டும் இது குறிப்பிட்ட எவருக்கும் சொந்தம் அன்று ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கே உரியது இது கடந்த காலத்திற்கும் எதி காலத்திற்கும் இடைய உள்ள ஒரு பாலமாகும் என்று ஆரோவில் பற்றி அறிக்கை கூறுகிறது.
புதுச்சேரின் வடமேற்குத் திசையில் 8 கீமீ தொலைவில் இது அமைந்துள்து பிரான்ஸ் தேசத்துச் சிற்பி ரோணர் ஆங்கர் இதனை வடிவமைத்தார் கிரேஸ் கருணை சகோதரத்துவம் செழுமை உறுதி நிலைமாற்றம் போன்ற பெயர்களில் அமைந்த குடியிருப்புக்களில் ஏறத்தாழ 2000 மக்கள் வாழ்கின்றார் இவர்களில் மூன்றில் இருபகுதியினர் இந்தியர் அல்லாதவரே கிரா£மப்புற பகுதியல் செம்மண் நிலத்தில் பரந்து விரிந்துள்ள மரம், செடி கொடி நிறைந்த இடத்தில் அரோவில் அமைந்துள்ளது நவீன மேல நாட்டுக் கட்டக்கலையும் பாரம்பரியம் மிக்க இந்திய நாட்டங்கள் அமைந்துள்ளது. இங்கு வசித்து வருபவர்கள் வெளாண்மை நிர்வாகம் வணிகம், கைத்தொழில், மாற்றுத் தொழில் நுட்பம் கல்வி சுகாதாரம் போன்ற பல்வெறு துறைகளில் ஈடுபட்டுள்ளன.

ஆரேஸிணி அமைப்பு போன்ற (சர்வதேச விருது பெற்ற பிரிவு) அனல்மின் தயாரிக்கும் அபிலிருந்த்திக் திட்டங்களில் சிலரும் ஈடுபட்டு வருகின்றனர். மத்தியில் உள்ள மேட்ரிமந்திர் என்பது ஒரு கோயில் அன்று தனியொருவர்  அமைதியா அமர்ந்து மண ஒருமைப்பாட்டினை வளர்க்க உதவும் இடமாகும். வளர்ந்து வரும் நகரியத்தின் மையப்பகுதில் 62 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது முழுமைபெற விரும்பும் மனிதனின் ஆவலுக்கு இறைவன் அளிக்கும் விடையின் அடையாளமாகும், வளர்ந்து வரும் மனித ஒற்றுமையுடன் இணையும் தெய்வீகத் தன்மையாகும்.

1968 பிப்ரவிரி மாதம் 28 ஆம் நாள் ஆரோவில் தொடக்க விழாவின் போது 24 நாடுகளிலிருந்து கொண்டுவரப்ட்ட மண்ணை தமரைமலர் வடிவத்தில் அமைக்கப்ட்ட பெரிய தாழியில் இட்டனர் அகிலமெல்லாம் ஒன்றே என்பதைக் குறிக்கும் வ¬யில் அது அமைந்து இந்தத் தாழி இன்று மேட்ரிமந்திர் தோட்டத்தில் உள்ள திறந்தவெளி அரங்கின் மத்தியல் வைக்கப்பட்டடுள்ளது மேட்ரிமந்திரின் 12 பக்கங்களை கொண்ட வெள்ளைச் சவவைக் கல்லால் ஆன உட்பதியில் மத்தில் 70 செ.மீ விட்டத்தில கண்£டியால் ஆன உலக உருண்டை உள்ளது அதன் சூரியக்கதிர்கள் பாய்ச்சப்படுகின்றன உலக உருண்டையின்மீது விழுகின்ற வெளிச்சம் கவனத்தை ஒரு முகப்படுத்த உதவும் குவியமாக உதவுகிறது

ஆரோவில் சர்வதேசப் பகுதியில் இந்திய தேசியத் திறந்த வெளிமாடம் உள்ளது- அதில பாரத் நிவாஸ்க்கு அருகில் ஆரோவில் பார்வையாளர்கள் மையம் இருக்கிறத இது நாள்தோறும் காலை 9,30 மணி முதல் மாலை 5.30 மணிவரை திறந்து வைக்கப்பட்டிருக்கும்











19th Century Lighthouse Pondicherry

பத்தொன்பதான் நூற்றண்டுக் கலங்கரை விளக்கம்





புதுவையில் பழைய கலங்கரை விளக்கம் குபேர் சாலையில் உள்ளது. 19 ஆம் நூற்றாண்டுக் கலங்கரை விளக்கம் புதுவைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது வட்ட வடிவத்தில் அமைந்துள்ள ஒரு கோபுரம் அந்தக் கலங்கரை விளக்கத்தை ஒரு நவீன கலங்கரை விளக்கமாக ஆக்கியுள்ளத அதில் ஈடு இணையறற்ற கட்டிடக் கலையின் சிறப்பு புலனாகிறது.
கலங்கரை விளக்கம் பற்றிய ஒரு சிறுகதை உள்ளது. பண்டை நாளில்  புதுவைக்கு வரும் கப்பல்களுக்கு எந்த அடையாளமும் இல்லை செங்குன்ற உச்சியில் அமைக்கப்பட்டிருந்த நெருப்பு மட்டுமே ஒளிவீசிக் கொண்டிருந்தது அது அவற்றிற்குப் போதுமானதாக இல்லை. ஆகவே முக்கியமான வணிகர்களும் கப்பல் தலைவர்களும் ஒரு கமிட்டி அமைத்து ஒரு கலங்கரை விளக்கம் அமைத்துத் தருமாறு வேண்டிக் கொண்டனர்.  நீண்டகாலம் கடந்த பின்னர் 1835 இல் செயின்ட் சைமன் என்பவர் ஆளுநராக இருந்த காலத்தில் இந்தத் திட்டம் நடை முறைக்க வந்தது இந்தத் திட்டத்தின் பொறியாளரான லூயிகுவெரி என்பவர் 19 ஆம் நூற்றாண்டு கலங்கரை விளக்கத்திற்கு 1835 இறுதியில் அடிக்கல் நாட்டினார் தொடக்க விழா 1836 பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றது ஆயினும் அது பயன் படுத்தப் படவில்லை ஏனென்றால் பிரான்சிலிருந்து வரவேண்டிய கலங்கரை விளக்கம் அதுவரை வரவில்லை. எனவே 1836 ஆம் ஆண்டு ஜூலைமாதம் முதல் தேதியில் அது ஒளி வீசியது இருபதாம் நூற்றாண்டில் பல்வெறு மாற்றங்கள் செய்யப்பட்டு அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டன ஒளிவீசச் செய்வதிலும் பல புதிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே புதுச்சேரி செல்லும் பயணிகள் தவறாது 19 ஆம் நூற்றாண்டுக் கலங்கரை விளக்கத்தைக் கண்டு மகிழ வேண்டும்.


China Subbaraya Pillai





The road that runs parallel to West boulevard now known as Anna Salai, is china Subbaraya Pillai Street, Mr. Pillai was no Dubash or General to deserve a long street to be named after him. What then is so special about him?
           The Good that men do lives after them.  Known for his Philanthropic activities, China Subbaraya Pillai was affluent enough to trade in ships.  During the French Revolution he exported clothes and indigo to France. He became Richer.
          As a business magnate he made property worth five lakh during his life time.  A Lakh of rupees in the 19th century was worth a crore of today.  Since his only daughter Vedavalli Passed away when she was quite young, he left his legacy to the poor and the needy.
          As per his will dated Jan 5, 1875 prepared on his deathbed the government built a temple and a tank named them after the deceased vedavalli and began feeding the hungry poor every day, from the proceeds of the charity funds . A Separate committee headed by the Mayor of Pondicherry Municipality was constituted for the purpose of administering the funds of the endowment.

          The Chatram (Choultry) is situated at Subbaraya Pillai Thottam in Orleanpet, and the feeding of the poor continues till today. 


Religious Harmony in Pondicherry

    Statistics Bureau furnished a list of 365 Temples in Pondicherry. Out of that only 75 are managed by private bodies and the rest 290 by the Govt. of Pondicherry.  Bahur, Villianur and Ozhukarai are the major communes in Pondicherry that house more number of Temples than any other commune here.  The fact that 74 Temples are found in Bahur commune alone raises our eyebrows. Out of every 100 Temples in Pondicherry, 75 are devoted to Vinayaka (Lord Ganesh). While Pondicherry can boast of a large number of Temples for Vishnu.  Karaikal Can equally feel proud of it Temple of Siva.

         Pondicherry abounds in Churches too. Ariyankuppam, Nellithope, Villianur and Pondicherry proper can boast of very old and eminent Churches that were built sometime in the later half of the 18th century. Historians tell us that in 1761 when the British bombarded Pondicherry, several Churches disappeared without any trace. The Church of Mother Mary at Ariyankuppam, it is said, was a pilgrimage centre even during the time of Dupleix.

For the Muslim population in Pondicherry there are 5 Mosques to do their namas. The Mosques at Mulla Street and Chanda Sahib Street are more know than the others.

        In spite of its linguistic and religious diversity, there is unity and that is the greatness of Pondicherry. 



Aurobindo Ashram

அரவிந்தர் ஆசிரம் 




புதுச்சேரியிலிருந்து 8 கி.மீ வடமேற்குப்பகுதியில் அமைந்துள்ளது அரவிந்தர் ஆசிரமம் இந்தியாவிலேயே மிகப்பிரலாமான ஆசிரமம் பொருளாதார வசதியும் மிகுந்த ஆசிரமம் இந்தியாவில் வெவ்வெறு மாநிலங்களிலருந்து உலகின் பல்வேறிடங்களிலருந்தும் ஆம்மீக நாட்டம் ª£ண்ட பக்கதர்கள் வந்து குவிவிகின்றனர். இங்கு யோகா, அறிவியல் ஆகிய இரண்டையும் இணைத்துப் புதிய வழியில் பயிற்சி அளிக்கப்படுகிறது பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையில் திறந்து வைக்கப்படுகிறத மூன்று வயதிற்குக் குறைந்த குழந்தைகள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆசிரம நர்வாகத்தின் அனுமதி பெற்று நிழற்படம்  எடுத்துக் கொள்ளலாம் இந்த ஆசிரம்  ஸ்ரீ அரவிந்த கோஷ் எனும் தத்துவப் பெரியாரால் 1926 இல் நிறுவப்பட்டது அவர் சிறந்த கவிஞராகவும் விளங்கினார் வெள்ளையரின் பிடியிலிருந்த தப்புவதற்கென்றே புதுச்சேரிக்கு வந்தார் இங்கு வந்தபின் அவருக்கு ஆன்மீக நாட்டம் 
ஏறபட்டது குறிப்பாக யோகாகவை அடிப்படையாக கொண்டதே அவரது ஆன்மீகத்தத்துவம்  அவர் ஏழுதியவை எண்ணற்ற சீடர்களை அவருக்கத் தந்தன




Arikkametu
அரிக்கமேடு 



செங்கத்தான சுவர்களும் துறவியர் இல்லமும் மட்டுமே இன்று காணப்படுகின்றன அகழ்வாய்வு செய்தபோது தோண்டப்பட்ட குழிகள் நிறைந்த பகுதிகளையும் காணலாம், வானுற ஒங்கிய தென்னை மரங்களம்  வளமான மாமரங்களம் ஏராளமாய்க் காணப்படுகின்றன, எண்ணற்ற மரக்கன்றுகளும் நடப்படிருப்பது கண்கொள்ளக் காட்சியாக  உள்ளது.  கைக்கெட்டும் உயரத்தில் தொங்கிக் கொண்டுள்ள மாங்கனிகள். அரிக்கமேட்டின் வரலாற்றுப் பெருமையினை நீங்களும் அனுபவிக்க வேண்டுமாயின் நேரிற் செல்ல வேண்டும் நேரிற்காணும் போது அதன் பெருமை உங்கள் உனையும் உயிரையும் ஊடுருவிச் செல்லும்.



Antique household goods
பழமைச் சிறப்புடைய வீட்டுச் சாமான்கள் 




பழமைச் சிறப்புடைய வீட்டுச் சாமான்கள் 
இவை பாதுகாக்பட்ட உடைமைகளாக் கருதப்படுகின்றன பழம் பொருட்கள் சேர்ந்து வைக்கப்ட்டடுள்ள இடங்களுக்குச் செல்லாமல் புதுவையில் ஷாப்பிங் நிறைவுறாது. உள்ளூர் மக்கள் மட்டுமன்றி சுற்றுலா வருவோரும் புதுவையில் பழைய வீட்டுச் சாமான்கள் வாங்கிச் சேகரிப்பதிலே ஆர்வம் காட்டுகின்றனர். புதுவைக்குச் சுற்றுலாச் செல்வோர் தென்னிந்திய பிரிட்டிஷ் பிரெஞ்சுப்பாணியில் அமைந்த பழம் பொருட்களைக் கண்டுமகிழலாம், பழம் பொருட்களைப் பாதுகாக்கும் கடைகள் யூனியன் பகுதிகளில் நிறைய உள்ளன. வாங்க விரும்புவோரும்  சுற்றுலாப் பயணியரும் அத்தகைய கடைகளுக்குச் செல்லாம் இவை பற்றி மேலும் அதிகமாக அறிந்துகொள்ள விரும்புவோர் இங்கு சென்றால் அறிந்து கொள்ளலாம். பழம் பொருட்களில் விருப்பமும் நாட்டமும் கொண்டவர்களின் அழகியல் பற்றும் இங்கு புலப்படுகின்றன. நாற்காலி போன்ற பொட்களைச் செய்வதற்க நல்ல தரமிக்க மரங்களையே பயன்படுத்தியுள்ளனர் பழம் பொருட்களை வாங்குவது பெரிதன்று அவற்றை அவ்வப்போது பாதுகாப்பதே பெரிய காரியமாகம். நூறாண்டுக்கு மேற்பட்டவற்¬யே பழம் பொருட்கள் என்கிறோம், புதுவையில் இத்தகைய பொருட்கள் தனித்துவம் பெற்றவை விலை அதிகமாக இருப்பினும் பழம் பொருளை நேசிப்பவர்கள் மட்டுமே அதன் பெருமையை உணர்வர் அவர்கள்தான் அவற்றைப் பாரட்டுவார்கள் அவற்றைப் போன்றே புதிய பொருட்கள் செய்யப்ட்டிருப்பினும் பழைய பொருட்களுக்குரிய கிராக்கி என்றும் குறையாது.




வாசனைப் பொருட்கள் 


நறுமணங்கமழும் ஊதுவத்திகள் உட்படப் பல்வேறு வாசனைப் பொருட்கள் புதுவையில் உற்பத்தி செய்யப்படுகின்றன   இவை தீமை விளைவிக்காத ரசாயனப் பொருள்கலிருந்து தயாரிக்கப்படுகின்றன எந்தவித நச்சுத்தன்மையும் இல்லதவை மணங்கமழும் மெழுகுவத்தி ஊதுவர்த்தி ஆகியவை தயாரிக்கும் தொழில் பெரிதும் வளர்ச்சியடைந்துள்ளது இந்தியாவின் மற்றமாநிலங்களுக்கு அனுப்பபடுவதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.



Pondicherry Tourist Shopping
புதுவைச் சுற்றுலாப் பயணிகள் ஷாப்பிங்கில்  


கைவினைப் பொருட்கள் 








புதுவையில் தயராகும் கைவினைப் பொருட்கள் வாங்கத் தவறுவதில்லை, புதுவைக்கு வந்ததன் நினைவாக இவர்கள் ஊர் திரும்பும் போது இத்தகைய பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.  இந்தப் பொருட்களில் பல உள்ளூர் மக்களாலேயே செய்யப்டுபவை.  மெழுகுவர்த்திகள், ஊதுவத்திகள் ஆகியவற்றை விரும்பி வாங்குகின்றனர், அழகான கல் நகைகளும் புதுவையில் செய்யப்படுகின்றன, கைத்தறித் துணிகளும் கதர்த்துணிகளும் இங்க நேய்யப்படுகின்றன, பட்டுத் துணி லினன், பாப்ளின் பின்னலாடைகள், ஆகியவையும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன, பிரம்பு, மரம் ஆகியவற்றிலிருந்தும் அழகான பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. இவை அழகு படுத்தவதற்குரிய அலங்காரப் பொருட்களாகப் பயன்படுகின்றன, மேசை விளக்குகள் பேனா ஸ்டாண்ட், தட்டுகள், மேசைவிரிப்புகள் ஆகியவையும் நியாயமான விலையில் கிடைக்கின்றன, உள்ளூர் மக்கள் கையால் தோல்பை, இடைவார் போன்றவற்றைச் செய்கின்றனர் மண்பொம்மைகள் போன்றவையும் பயணிகளால்  விரும்பி வாங்கப்படுகின்றன, சுட்டமண் பொம்மைகளில் கையால் வண்ணம் பூசி அவற்றை விற்கின்றனர், அவை வெளி மாநிலங்களிலருந்து வரும் பயணிகளால் மிகவும் விரும்பி  வாங்கப்படுகின்றன, கைவினைக் கலைஞர்கள் அவற்றிற்கு வண்ணம் பூசுகையில் மிகக் கவனாமாக வடிவமைக்கின்றனர்.



Puducherry City

Historical Name of the State is PONDICHERRY (
Pāṇṭiccēri)


On 20 September 2006, Officially changed to PUDUCHERRY

No comments:

Post a Comment